அடச்சீ… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை… பைக் ரைடு கூட்டிச் சென்று… விஷம் வைத்துக் கொன்ற கொடூர மனைவி… ஜெய்பூரில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

ஜெய்பூரைச் சேர்ந்த கவிதா மீனாவுக்கும் மகேஷ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருப்பினும், கவிதாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரைக் காதலித்து வந்ததால், தனது கணவரை வழியிலிருந்து அகற்றத் திட்டம் தீட்டினார்.

வயிற்று வலி என்று பொய் கூறி கணவரை மருத்துவமனைக்கு அழைத்துப் சென்ற கவிதா, திரும்பி வரும் வழியில் ஜூஸ் குடிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். பின்னர், கணவருக்குத் தெரியாமல் அந்த ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். விஷத்தை அருந்திய மகேஷின் உடல்நிலை மோசமடையவே, கவிதா தனது காதலன் கணேஷை வரவழைத்து, இருவருமாக மகேஷை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளனர்.

   

மகேஷ் பரிதாபமாக உயிரிழந்ததும், கவிதா நாடகமாடி கணவரின் சகோதரரை வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையில் விஷம் கொடுக்கப்பட்டதே மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், கவிதா மற்றும் அவரது காதலன் கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.