பிரபல நாட்டுப்புற நடனக் கலைஞரான மாதூரி ரத்தோடு, தன்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய இணை நடனக் கலைஞர் ஈஷ்வர் சாய் மீது நர்சிங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்தும் அவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலும், அவர் கைது செய்யப்படாமலும் இருந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாதூரி ரத்தோடு தீவிர வேதனையில் ஆழ்ந்தார்.
இதனால் மிகுந்த விரக்தியடைந்த மாதூரி, தனது வீட்டின் அறையைப் பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். நீண்ட நேரமாக அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
https://twitter.com/TeluguScribe/status/2096576780362768888/video/2
திருமண வாக்குறுதி கொடுத்து மோசடி செய்த ஈஷ்வர் சாய் மீது காவல்துறை எந்தவிதக் நடவடிக்கையும் எடுக்காமல் தாமதிப்பதோடு, நர்சிங்கி காவல் துறையினர் அவரைத் தப்ப வைக்கப் பாதுகாப்பதாக மாதூரி குற்றம் சாட்டியுள்ளார். நீதி கிடைக்காத வேதனையினாலும், மன உளைச்சலினாலும் தான் இந்தத் தீவிர முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துக் காவல் துறை கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
