பாவ்நகர் எஸ்.டி பேருந்து நிலைய நடைபாதையில், கடந்த 7 ஆண்டுகளாக உடன் வாழ்ந்து வந்த காதலரால் 40 வயது பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 வயதான ஃபைசல் என்ற இளைஞர், தன் உடன் வாழும் காதலி காஜல்பென் பரையா என்பவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
https://twitter.com/Delhiite_/status/2096188818269642815/video/1
ரவி என்பவருடன் காஜல்பென்னுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு ஃபைசல் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மதுபானம் தொடர்பான தகராறே இக்கொலைக்குக் காரணம் என சம்பவ இடத்தில் இருந்த ரவி தெரிவித்துள்ள நிலையில், ஃபைசலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
