“குழந்தையை பொது இடத்தில் சிறுநீர் கழிக்க வைத்த பெற்றோர்…” கொந்தளித்த சுற்றுலா பயணி… சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

கோவாவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான தெற்கு கோவாவின் கபோ டி ராமா பகுதிக்குச் சென்ற ஐஸ்வர்யா சிங் தார்கோத்ரா என்ற சுற்றுலாப் பயணி, அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழல் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அழகான இயற்கை சூழலுக்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் வீசிச் சென்ற குப்பைகளைச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் சமூகப் பொறுப்பற்ற தன்மையைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

மேலும், அங்கு வந்திருந்த பெற்றோர் சிலர், தங்களது குழந்தையைப் பொது இடத்திலேயே கழிப்பிடம் பயன்படுத்த வைத்ததையும், அதை அங்குள்ள பெரியவர்கள் எவ்வித கூச்சமும் இன்றி வேடிக்கை பார்த்ததையும் கண்டு தான் பெரும் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். “இயற்கை உங்கள் தனிப்பட்ட கழிப்பறை அல்ல; நாம் ரசிக்கும் இடங்களை அப்படியே தூய்மையாக விட்டுச் செல்ல வேண்டும்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DcqJy0byGqE/?utm_source=ig_web_copy_link&igsi=MzRlODBiNWFlZA==

   

குழந்தைகளுக்குச் சமூகப் பொறுப்பைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பெற்றோரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் சாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சுற்றுலாத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சிவிக் சென்ஸ் மற்றும் தூய்மை பராமரிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.