“ஏன் வேலைக்கு போகல?”… ஒற்றை கேள்வியால் பறிபோன உயிர்… காய்கறி கத்தியால் கணவன் செய்த கொடூரம்… கொளத்தூரை உலுக்கிய கொடூர கொலை…!!

By Gayathri on புரட்டாதி 1, 2026

Spread the love

கொளத்தூர் சத்யா நகரைச் சேர்ந்த சரண்ராஜ் – முத்துமாரியம்மாள் தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரண்ராஜ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவும் வேலைக்குச் செல்லாதது குறித்து மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த சரண்ராஜ், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் மார்பில் கொடூரமாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கொளத்தூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியைக் கொன்ற சரண்ராஜை அதிரடியாகக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட முத்துமாரியம்மாள் தனது முதல் கணவரைப் பிரிந்து சரண்ராஜை இரண்டாவதாக மணந்தவர் என்ற தகவல் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. வேலைக்குச் செல்லாததைக் கண்டித்ததால் மட்டுமே இந்த கொலை நடந்ததா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.