ராஜினாமா செய்த கையோடு திடீர் பல்டி… அம்பாசமுத்திரம் MLA விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொகுதிக்கு பிரதிநிதி இல்லாததால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இடைத்தேர்தல் வழக்கு முடியும் வரை தன்னை எம்.எல்.ஏவாகப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்டப்பேரவை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி ராஜினாமா விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.