“இது என்னோட கெத்து”…. ரூ. 12 கோடி காரில் மிரட்டிய ஹார்திக் பாண்டியா…. ஓட்டுவதற்கு முன் செஞ்ச அந்த ஒரு விஷயம் தான்… வைரல் வீடியோ….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ பயிற்சி மையத்தில் தனது பயிற்சிக்குப் பிறகு புதிய நீல நிற ‘ஃபெராரி 12சிலிண்டரி’ ஆடம்பர காரில் மாஸாகப் புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான இந்த வி12 என்ஜின் கொண்ட சூப்பர் காரை ஓட்டிச் செல்வதற்கு முன், ஒரு தீவிர கார் காதலனைப் போல அவரே தனது மொபைலில் காரைப் புகைப்படம் எடுத்து ரசித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பயிற்சி உடையில் மிகவும் எளிமையாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் உலா வந்த பாண்டியாவின் இந்த ஸ்டைலான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

தனது கடின உழைப்பால் எட்டிய சாதனைகளையும், அதற்காகத் தான் பெற்ற சொகுசு காரையும் அவர் குழந்தை போல ரசித்த விதத்தை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். நாட்டின் முன்னணி விளையாட்டு வீரராக உயர்ந்த பிறகும், தனது சாதனைகளின் பலனை அவரே ரசித்து மகிழும் பாண்டியாவின் இந்தத் தனித்துவமான ‘ஸ்வாக்’ மற்றும் தன்னம்பிக்கை அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.