ஷாக்..! ரூ.18 லட்சத்தில் புதிய பைக்… சாலையில் நடந்த சோகம்…. பிரபல பைக் ரைடர் அஷு திடீர் மரணம்… சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

யூடியூப் தளத்தில் தனது மோட்டார் சைக்கிள் பயண வீடியோக்கள் மூலம் சுமார் ஒன்பது லட்சம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தவர் ரூர்க்கியைச் சேர்ந்த அஷு. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இவர், வெள்ளிக்கிழமை அன்று டேராடூனின் சஹாஸ்பூர் பகுதியில் நிகழ்ந்த எதிர்பாராத கோர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மரணம் இணையவாசிகளிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 18 லட்சம் ரூபாய் செலவில் புதிய விலையுயர்ந்த பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும் வழியிலேயே இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அவர் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான மற்றொரு அதிவேக பைக்கையும் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டுத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.