டேய் நான் உங்க அம்மா டா…. தாய் என்றும் பாராமல் மகன் செய்த கொடூரம்… இரவோடு இரவாக நடந்த உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி கிராமத்தில், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த தனது மகன் ராஜாவைத் தானே கொலை செய்துவிட்டதாக அவரது தாய் அய்யம்மாள் சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த இவர், தனது மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்தை அவர் தற்போது அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதையடுத்து, கருப்பாயூரணி காவல்துறையினர் அவரைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவில் கடுமையான மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜா, தாயிடம் தகராறு செய்ததோடு மட்டுமின்றி அவரிடம் பாலியல் ரீதியாகவும் அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த அய்யம்மாள், தன்னைத் தற்காத்துக்கொள்ள மகனைக் கீழே தள்ளி அங்கிருந்த இரும்புக் கம்பியால் அவரது தலை மற்றும் உடலில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

   

கொலைக்குப் பிறகு கொடூரமான முறையில் உண்மையை மறைக்க நினைத்த அய்யம்மாள், கழிப்பறை அமைப்பதற்காக வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த குழியில் மகனின் உடலைப் புதைத்து அதன்மீது விறகுகளை அடுக்கி வைத்துள்ளார். மேலும், தடயங்களை அழித்துவிட்டு தனது மகன் மாயமாகிவிட்டதாக ஊர்மக்களிடம் இத்தனை நாட்களாக நாடகமாடியுள்ளார். தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். புதைக்கப்பட்ட உடலை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.