சென்னை புழல் மத்திய சிறையில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உயர் அதிகாரிகளுடனும் சிறைத்துறை நிர்வாகிகளுடனும் நேரில் சென்ற அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
குறிப்பாக, கைதிகளுக்காக உணவு தயார் செய்யப்படும் சமையலறை, உணவின் தரம் மற்றும் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ வசதிகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சரின் இந்த எதிர்பாராத வருகையைத் தொடர்ந்து புழல் சிறைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
