நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மனித குலத்தையே தலைகுனியச் செய்யும் சில அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பேரிடர் நேரத்தில் மனிதாபிமானம் செத்துப்போனதை உணர்த்தும் வகையில், ஆற்றில் அடித்து வரப்பட்ட ஒரு பெண்ணின் பிணத்திலிருந்து சில நபர்கள் தங்கத் தோடுகளைக் கழற்றும் அருவருக்கத்தக்க காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ ஊடகத்தின் செய்தியின்படி, இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் மரக்கட்டையைப் பயன்படுத்தி வெள்ளத்தில் மிதந்து வந்த உடலை அருகில் இழுக்க, மற்றொரு நபர் அந்தப் பெண்ணின் காதில் இருந்த தங்கக் தோடுகளைப் பறிக்கும் மனிதாபிமற்ற செயலில் ஈடுபடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இயற்கை பேரிடரால் மக்கள் உயிரை இழந்து தவிக்கும் துயரமான சூழலில், இதுபோன்ற திருட்டுத்தனமான செயல்கள் மனிதத்தன்மையின் வீழ்ச்சியைக் காட்டுவதாக நெட்டிசன்கள் “கலியுகத்தின் உச்சம்” எனத் தெரிவித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/NirmalPrasai5/status/2092837843433669038/video/1
இயற்கை சீற்றங்களால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயும் உள்ள இந்த இக்கட்டான சூழலில், மனிதாபிம சூழலில் மனிதநேயத்துடன் உதவ வேண்டிய சிலரின் இத்தகைய சுயநல மற்றும் ஈனத்தனமான செயல்கள் அனைவரையும் சோகத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளன. பேரிடர் காலங்களிலும் மனிதர்களின் சுயநலம் மாறாமல் இருப்பதைக் காட்டும் இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
