“கஷ்டபட்டு படிக்க வச்சேன்…” வாட்ஸ் அப் சாட் பார்த்து உறைந்த கணவர்… துரோகம் செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 27, 2026

Spread the love

பீகாரைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணிற்கு கடந்த 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தான் மேற்சொண்டு படிக்க விரும்புவதாகக் கூறியதால், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது கணவர், அர்ச்சனாவின் பயிற்சி வகுப்புகள், அறை வாடகை, உணவு மற்றும் தேர்வுக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுப் படிக்க வைத்துள்ளார்.

கணவரின் உதவியால் தீவிரமாகப் படித்த அர்ச்சனாவுக்குப் பீகார் போலீஸ் துறையில் வேலை கிடைத்தது. ஆனால், வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே அர்ச்சனாவின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கணவரிடம் பேசுவதைக் குறைத்து வந்த நிலையில், ஒருமுறை விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது, அவரது வாட்ஸ்அப்பில் விவேக் என்ற நபருடன் இருந்த காதல் உரையாடல்களைக் கணவர் கண்டுபிடித்துள்ளார்.

   

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற அர்ச்சனா மீண்டும் வேலைக்குத் திரும்பித் தனது காதலனுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. முன்னர் நடந்த ‘ஜோதி மல்ஹோத்ரா’ சம்பவத்தைப் போன்றே இச்சம்பவமும் அமைந்துள்ளதாகக் கூறி, இணையவாசிகள் பலரும் கணவனுக்கு நேர்ந்த ஏமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.