“மதத்தை கடந்த திருமணம்…! சனாதன தர்மத்தை ஏற்றுச் சஞ்சீவ் குமாரைக் கரம்பிடித்த சோனம்…! இணையத்தில் வைரலாகும் திருமண பதிவு…!!

By Devi Ramu on ஆவணி 27, 2026

Spread the love

பீகார் மாநிலம் பெகுசராயைச் சேர்ந்த சோனம் கதூன் என்ற முஸ்லிம் பெண், தனது காதலரான சஞ்சீவ் குமார் என்பவரைச் மணப்பதற்காகச் சனாதன தர்மத்தைத் தழுவியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் மதினாத் பகுதியில் அமைந்துள்ள அகஸ்திய முனி ஆசிரமத்தில், ஆச்சார்யா பண்டிட் கே.கே.சங் தர் தலைமையில் வேதாகம மந்திரங்கள், ஹவன-பூஜைகள் மற்றும் மதச் சடங்குகளுடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

தூய்மைப்படுத்தும் சடங்குகளுக்குப் பிறகு சோனம் கதூனின் பெயர் ‘சோனம் தேவி’ என மாற்றம் செய்யப்பட்டது. திருமண சடங்குகள் முடிந்ததும், மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.