2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்கள் (ரூ.3,000 மதிப்பிலான) வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் சமையல் எரிவாயு சுமையைக் குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறிப்பிட்ட தகுதி வரம்புகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
