மகாராஷ்டிராவில் உள்ள வெல்ல ஆலையில் நடந்த சோக விபத்தில், லக்கிம்பூரைச் சேர்ந்த டேனிஷ் என்ற இளம் தொழிலாளி கொதிக்கும் வெல்லப் பாத்திரத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உடன் பணிபுரிந்த சக தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் அவரைப் பாத்திரத்திலிருந்து வெளியே மீட்டுள்ளனர். வேலை தேடி மகாராஷ்டிராவுக்குச் சென்ற 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் டேனிஷும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/RajuSharmajour1/status/2091818923243274653/video/1
இந்த கோர விபத்துக்கான முழு விவரங்களும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
