திடீர் திருப்பம்…. அதிமுகவுடன் கூட்டணி… அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்…. செம குஷியில் இபிஎஸ்….!

By Nanthini on ஆவணி 25, 2026

Spread the love

எதிர்காலத்தில் அதிமுக மற்றும் ஐஜேகே கூட்டணி நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐஜேகே தலைவர் பாரிவேந்தரின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், கடந்த தேர்தலில் தனது 84 வயதிலும் தளராத மன உறுதியோடு குன்னம் தொகுதியின் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு, பாரிவேந்தர் கடுமையாக உழைத்ததை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

அவருடைய இந்த அர்ப்பணிப்புமிக்க உழைப்பிற்கு நிச்சயம் வெற்றி கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இடையில் நுழைந்த சிலரின் சூழ்ச்சிகளால் அந்த வெற்றி பறிபோனது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த தற்காலிக பின்னடைவைக் கடந்து, வரும் காலத்தில் இக்கூட்டணி மக்களின் முழு ஆதரவோடு மகத்தான வெற்றியைப் பதிவு செய்யும் என EPS உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.