தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில், சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதன்படி அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
