ஆபத்தான வெள்ள நீரில் சிக்கி கரை சேர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மனிதர் ஒருவரை, யானை ஒன்று கவனித்து அவரிடம் சென்று பாதுகாப்பான கரைப் பகுதிக்குச் செல்ல உதவியது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது.
வேகமாகப் பாயும் வெள்ள நீரில் மனிதர் போராடுவதைக் கண்டு, யானை அவரை நோக்கிச் சென்று கரைக்குத் தள்ளுவது போல அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான தருணத்தைப் பார்த்த இணையவாசிகள், யானையின் அறிவுத்திறனையும் இரக்க குணத்தையும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், இது உண்மையில் யானையால் திட்டமிட்டு செய்யப்பட்ட மீட்பு நடவடிக்கையா, மிருகங்களின் இயல்பான எதிர்வினையா அல்லது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவா என்பது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் மற்றும் சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
