தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தங்களுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் நேரலை ஒளிபரப்பில் உரையாடல்கள் துண்டிக்கப்பட்டு “ரீல்… ரீல்…” என கட் ஆகி மேலே போய்விடுகிறது என்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவையில் நகைச்சுவையாகச் சைகை செய்து தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே அவையில் நிலவிய காரசாரமான விவாதச் சூழலைத் தணிக்கும் வகையில் அமைந்த இந்த சுவாரசியமான சைகையைக் கண்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் சிரித்து மகிழ்ந்ததால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது.
