சென்னையை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக ஒன்றிய நிர்வாகி ஏழுமலை, தன் மகளைக் காதலித்த பிரவீன் குமார் (22) என்ற இளைஞரைக் கூலிப்படை ஏவிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், பிரவீன் குமாரின் ஏழ்மையான பொருளாதாரச் சூழ்நிலையைக் காரணம் காட்டி பெண்ணின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இறுதியில் இந்த ஜாதி மற்றும் பொருளாதார ஆதிக்கம் சார்ந்த ஆணவப் போக்கு ஒரு கொடூரமான கொலையில் போய் முடிந்துள்ள நிலையில், தவெக கட்சியின் முக்கியப் பிரமுகரே இதில் கைதாகியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் கடுமையான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
