“லாபத்தில் பங்கு கேட்டாரா தீபிகா…?” ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகியதன் பின்னணி…! பிரணய் ரெட்டியின் குற்றச்சாட்டால் வெடித்த சர்ச்சை…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்த தீபிகா படுகோன், சம்பளம் மற்றும் வேலை நேரம் தொடர்பான மனக்கசப்பால் விலகியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தீபிகா வழக்கமான ஊதியத்தோடு படத்தின் லாபத்தில் 10 சதவீதப் பங்கைக் கேட்டதாகவும், அந்த நிபந்தனை ஒத்து வராததால் அவரை மாற்ற முயன்றபோது கதை விவரங்கள் வெளியில் கசிந்ததாகவும் தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

தயாரிப்பு தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தீபிகா நேரடியாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இருப்பினும், பெண் கலைஞர்கள் திரைப்படங்களை நிராகரிக்கும் போது அவர்கள் மீது இதுபோன்று ஆண் ஆதிக்க மனப்பான்மையுடன் பழிசுமத்தப்படுவதாகச் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு விமர்சனப் பதிவை அவர் ‘லைக்’ செய்துள்ளார். இதன் மூலம் தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுகளுக்குத் தீபிகா மறைமுகமாகத் தனது எதிர்வினையைப் பதிவு செய்துள்ளதாகத் திரைத்துறையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.