இந்தியாவைச் சேர்ந்த யூடியூப் விளாக்கர் ஒருவர் ரஷ்யாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குச் சுற்றிப் பார்க்கும்போது, மரம் ஒன்றில் ஏராளமான பூட்டுகள் பூட்டி தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். இது குறித்துப் அப்பகுதி உள்ளூர் மக்களிடம் அவர் விசாரித்த போது, காதல் ஜோடிகள் தங்களது காதல் காலம் முழுவதும் நிலைத்து அமரத்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மரத்தில் பூட்டைப் பூட்டிவிட்டு அதன் சாவியைத் தங்களுடனேயே எடுத்துச் செல்லும் பழக்கம் அங்கு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த வினோத சம்பவத்தைப் பதிவிட்ட அந்தப் விளாக்கர், மூடநம்பிக்கை மற்றும் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலை நாடுகளிலும் பரவலாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், “மூடநம்பிக்கை உலகெங்கும் பரவியுள்ளது” எனக் கூறி நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
