தட்டி கேட்டது குத்தமா…? பெண்களையும் விட்டு வைக்காத ரவுடிகள்…. ஹாஸ்பிடலுக்கு லத்தி, கம்புகளோடு வந்த கும்பல்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தீவிர அலட்சியம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்டு, மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளியின் குடும்பத்தினரும் உறவினர்களும் நியாயம் கேட்டு முறையிட்டுள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மருத்துவமனை உரிமையாளர், வெளியிலிருந்து ரவுடிகள் மற்றும் அடியாட்களை வரவழைத்து நோயாளியின் உறவினர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார். கம்பிகள் மற்றும் தடிகளால் அவர்களைத் தரையில் தள்ளி மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். இந்த வெறியாட்டத்தில் பெண்களையும் விட்டுவைக்காமல் அடியாட்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் பலர் படுகாயமடைந்தனர்.