தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் முகாம் அலுவலகத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் டெண்டர் வெளியிடுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாகத் தொடங்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சியினர் கடும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த திடீர் அவசரத்திற்குப் பின்னணியில் ஆடி மாதம் பிறக்கவுள்ளதால், ஆன்மீக நம்பிக்கையின்படி அசுபமான அந்த மாதத்தில் எந்தவொரு புதிய பணியையும் தொடங்கக்கூடாது என்ற முதலமைச்சர் தரப்பின் எண்ணமே காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த விவகாரத்தில் எவ்வித நிதி முறைகேடோ அல்லது விதிமீறலோ நடைபெறவில்லை என்றும், வழக்கமான நிர்வாக நடைமுறைகளின்படியே பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளனர்.
