போனை தரியா…? ஜெயிலுக்கு போறியா…? டோனை மாற்றிய போலீசார்… உடனே பயந்த பெண்…. ரயில் நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

ராஞ்சி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயணி ஒருவர் தனது ரூ.40,000 மதிப்புள்ள செல்போனைச் சார்ஜரில் போட்டுவிட்டுச் சிறிது நேரம் தூங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த போனைத் திருடிக் கொண்டு நைஸாக நழுவ முயன்றுள்ளார். விழித்துப்பார்த்த பயணி போன் காணாததைக் கண்டு அந்தப் பெண்ணைத் துரத்திச் சென்று தனது போனைத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண் போனைத் தர மறுத்ததுடன், அது தன்னுடைய போன் தான் எனக்கூறி அந்த இளைஞரிடமே சண்டைக்குச் சென்றுள்ளார்.

உடனடியாக அங்கிருந்த போலீஸாரிடம் இளைஞர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் அந்தப் பெண் போனைத் தர மறுத்துள்ளார். இறுதியாக, “போனைக் கொடுக்கிறாயா அல்லது சிறைக்குச் செல்கிறாயா?” எனப் போலிஸார் டோன் மாற்றி மிரட்டிய பிறகே, அந்தப் பெண் போனைத் திருப்பிக் கொடுத்துள்ளார். பயணிகள் ரயில் பயணத்தின் போது தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.