திக் திக் நிமிடங்கள்…! லாரி டயரில் சிக்கி  உருக்குலைந்த பைக்… அதிர்ஷ்டவசமாக தப்பிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 19, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தின் வாகோலி-பவாடி சாலையில் ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை காலை 11:15 மணியளவில் அதிர்ச்சி தரும் விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. அதிவேகமாக வந்த டம்ப்பர் லாரி ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த மோதலின் வீரியத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் உருக்குலைந்து போனது. இருப்பினும், இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகன ஓட்டி காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

விபத்தைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான முழு காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பகுதியில் கனரக வாகனங்களின் கட்டுப்பாடற்ற போக்குவரத்தே விபத்துகளுக்குக் காரணம் என குற்றம் சாட்டும் பகுதி மக்கள், வீதிப் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.