“ஒரே ஒரு வார்த்தை… ஓங்கி அறைந்த போலீஸ்”…. பதிலுக்கு திருப்பி அடித்த வாலிபர்…. தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு…. ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்‌டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகப் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் மறியலை மீறிச் செல்ல முயன்றதால், விசிகவினருக்கும் அவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பான சூழலும் நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்றார். அப்போது, அந்த இளைஞர் காவலரிடம் ஏகவசனத்தில் (ஒருமையில்) பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் இளைஞரின் கன்னத்தில் அறைய, பதிலுக்கு அந்த இளைஞரும் காவலரின் கன்னத்தில் அறைந்ததால் சூழல் மேலும் கைமீறிப் போனது. இச்சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.