“என்னை விட்டுரு… மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த மர்ம நபர்…” தூய்மை பணியாளரை கொடூரமாக தாக்கிய கொலையாளி… சரிந்து விழுந்த வாலிபர்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 17, 2026

Spread the love

கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 7:27 மணியளவில் அனில் வேலை செய்துகொண்டிருந்தபோது, மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தாக்குதலுக்குப் பிறகு அனில் தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்று கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் பலர் இருந்தும் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இச்சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளியைக் கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குல்தீப் குமாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.