அசெம்பிளியில் இனி நோ ஜோக்ஸ்…. OPS முதல் தங்கம் தென்னரசு வரை… நேரில் அழைத்து ‘டோஸ்’ விட்ட ஸ்டாலின்… வெளியான பரபரப்பு தகவல்…!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

சட்டமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம், கே. என். நேரு, தங்கம் தென்னரசு, எம். ஆர். கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என மு. க. ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களை நேரில் அழைத்து எச்சரித்துள்ள அவர், அவையின் நேரலையை பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், அவசியமற்ற நகைச்சுவைப் பேச்சுகளையும் தனிப்பட்ட சுவாரஸ்யங்களையும் முற்றிலும் தவிர்த்துவிட்டு, மக்கள் பிரச்சினைகளுக்கான ஆக்கப்பூர்வமான விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசின் குறைபாடுகளைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டி, பொதுமக்களின் முக்கியக் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளார்.