திமுகவின் மண்டல ரீதியிலான கள ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் கட்சி அமைப்பில் முக்கிய அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளத் தலைமைத் திட்டம் வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத சில மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த முன்னாள் அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு மாநில அளவில் வேறு பணிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை 100-ஆகப் பிரித்து, அதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கணிசமான வாய்ப்புகளை வழங்கி புதிய ரத்தத்தைப் பாய்ச்சவும், எதிர்வரும் தேர்தல் களங்களைச் சந்திக்க கட்சியைப் பலப்படுத்தவும் தி.மு.க தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
