சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவின் மாணவரணிச் செயலாளராகவும், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவராகவும் இருந்த சிங்கை ராமச்சந்திரன் அக்கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் முறைப்படி தவெகவில் இணைந்தார்.
ஜெகதீஷ் பழனிசாமியின் நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் இவர் விஜய் முன்னிலையில் நேரடியாகக் கட்சியில் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலிருந்து விலகி மாற்று அரசியல் பாதையைத் தேர்வு செய்திருந்த போதிலும், அவர்கள் விஜய் முன்னிலையில் நேரடியாகக் கட்சியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படுகிறது.
