சமீபத்திய எம்பி-க்கள் கூட்டம் எதிர்பார்ப்புகளின்படி முடியாமல் பின்னடைவைச் சந்தித்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்குப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தொகுதி மறுவரையறையே முற்றிலுமாக வேண்டாம் என்ற உறுதியான நிலையில் இருந்த திமுக, தற்போது ‘நியாயமான தொகுதி மறுவரையறை’ தேவை என்ற நிலைக்கு இறங்கிவந்திருப்பதே அதற்குச் சான்றாக அமைவதோடு, இந்த மாற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் முதன்மைச் சக்தியாகத் தன்னை முன்னிறுத்தி, திமுகவின் பாரம்பரியமான அரசியல் இடத்தை விஜய்யின் தவெக கைப்பற்றத் தீவிரமாகக் காய்நகர்த்தி வருகிறது.
