அந்த மனசு இருக்கே….! அது தான் சார் கடவுள்…. காரில் வந்த இளைஞர் செய்த நல்ல செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!

By admin on ஐப்பசி 15, 2022

Spread the love

சிக்னல்களில் பலவகையான பொருள்கள் மற்றும் புத்தகங்களை ஏந்திய படி சில குழந்தைகள் நின்று இருப்பதை பார்த்திருப்போம். அவர்கள் அனைவரும் சிக்னல் போட்டவுடன் வண்டியில் இருக்கும் நபர்களிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி கேட்பார்கள். ஆனால் பலரும் மொபைலில் இருந்து கண்களை சிறிதும் அகற்றாமல் கைகளை ஆட்டி வேண்டாம் என்று கூறுகிறார்கள் .ஆனால் அந்த சிறுவர்களுக்கு இது பழகிப்போன செயல் என்பதால் அடுத்தவரிடம் சொல்கிறார்கள்.

   

அதிலும் கார்களில் இருக்கும் நபர்கள் எல்லாம் அவர்களை ஏரெடுத்துக் கூட பார்ப்பதற்கு நேரமில்லாமல் இருப்பார்கள். தங்களது காரின் கண்ணாடியை இறக்கிக் கூட அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூட பார்க்க மாட்டார்கள் .

   

அவர்களுக்கு 10 அல்லது 11 வயது தான் இருக்கும். அனைவரும் அப்படிப்பட்டவர்கள் தான் என்று கூறி விட முடியாது. ஒரு சில மனிதாபிமானம் உள்ள நபர்கள் சிலர் அந்த சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வார்கள்.

 

அப்படி ஒரு இளைஞர் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் அந்த சிறுவரின் கைகளை பிடித்து குலுக்கி அவர்களிடம் பேசி மகிழ்ச்சியடைகிறார். அவர் பேசுவதை பார்த்தால் அந்த சிறுவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். பெரும்பாலான மக்கள் அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை பார்த்து சுத்தமில்லாதவர்கள், அவர்களை தொட்டால் வியாதி வந்துவிடும் என்று எண்ணுவதுண்டு.

ஆனால் லக்ஷ்ரியானா காரில் வந்த ஒரு நபர் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அந்த சிறுவர்களிடம் மகிழ்ச்சியாக பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது. மேலும் அவர் பேசுவதை பார்த்தால் அந்த சிறுவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.