என்னது….! 24 மணி நேரமும் இட்லி கிடைக்குமா?…. பெங்களூருவில் இட்லி ஏடிஎம் இயந்திரம்…. வைரல் வீடியோ….!!!

By admin

Published on:

இந்தியாவின் சிலிக்கான் வேலே என்று அழைக்கப்படும் டெக்னாலஜிகளின் நகரம் பெங்களூரு. இங்கு ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. பெங்களூருவில் புதிதாக இட்லி, தோசை போன்றவற்றை 24 மணி நேரமும் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

   

‘Freshot Robotics’ என்ற ஸ்டேட்டஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இது. இந்த இயந்திரம் இட்லி தயாரித்து சிறப்பாக பேக்கிங் செய்து தருகிறது. இந்த இயந்திரம் வைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அனுபவம் கிடைக்கும். இது ஆட்டோமேட்டிக் முறையில் தயாரிக்கப்படுகின்றது.

இதனை உருவாக்க முக்கிய காரணம் 2016 ஆம் ஆண்டு அதன் நிறுவனத்தின் தலைவர் சரண் ஹீரோமத் அவரின் உடல்நிலை சரியில்லாத மகளுக்கு இட்லி வாங்க நகர் முழுவதும் அலைந்து உள்ளார். ஆனால் அவருக்கு எங்கும் இட்லி கிடைக்கவில்லை இதன் காரணமாகவே தற்போது இந்த இட்லியை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

24 மணி நேரமும் இட்லி கிடைக்க வேண்டும் என்பதால் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னாட்டு உணவுகளை தயாரிக்கும் ஒரே இயந்திரம் இது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரம் பெங்களூரு நகரில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் பல இடங்களில் இது போன்று அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயந்திரத்தில் இட்லி மட்டும் இல்லாமல் தோசை, அரிசி உணவகங்கள், பழச்சாறுகள் போன்றவையும் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

author avatar