கல்யாணம் என்றால் என்ன?….. விழுந்து விழுந்து சிரிக்க வைத்த மாணவனின் பதில்….. அப்படி என்ன எழுதினாரு?…. வைரல் வீடியோ….!!!

By admin

Published on:

மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க வேண்டும் என்பதற்காக பல தலைப்புகளில் கட்டுரை எழுத வைக்கப்படுவது வழக்கம். அவை மாணவர்களின் அறிவு மற்றும் புரிதல் திறனை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். கட்டுரை தலைப்பு கொடுக்கப்படும் போது ஒரு பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும் என்று நாம் குறிப்பிட்டு இருப்போம். அப்படி ஒரு கட்டுரையில் மாணவன் எழுதியுள்ளது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

   

அந்த கட்டுரையில் திருமணம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த மாணவன் எழுதியுள்ளதாவது” திருமணம் என்பது என்னவென்றால் ஒரு பெண்ணின் பெற்றோர் இப்போது நீ பெரிய பெண்ணாகி விட்டாய், இதனால் உனக்கு எங்களால் சாப்பாடு போட முடியாது.

உனக்கு உணவளிக்கும் சிறந்த ஆணை நீ கண்டுபிடி என்று கூறுகிறார்கள். அதன் பின்னர் அந்த பெண் ஒரு ஆணை கண்டுபிடிக்கிறார்.

அந்த ஆணின் பெற்றோர் அவனிடம் நீ பெரிய பையனாக ஆகிவிட்டாய். இதனால் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அதன் பின் இருவரும் தங்களை சந்தித்துக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள் .பிறகு ஒன்றாக வாழ சம்மதித்து குழந்தை பெற்றுக் கொள்ள முட்டாள்தனமான செயல்களை செய்ய தொடங்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதை படித்த அந்த ஆசிரியர் அவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களை அழைத்து முட்டாள்தனம் என்றும் கட்டுரையின் மீது குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

author avatar