BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பாரம்பரிய நெசவு முறைகளைப் பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்த நிதிப் பங்கீடு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, தமிழகத்தின் ஜவுளித் தலைநகரான திருப்பூரில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில், ரூ.10 கோடி செலவில் ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்’ அமைக்கப்பட உள்ளது. மேலும், சர்வதேச அளவிற்கு ஆடை வடிவமைப்பில் புதிய உத்திகளைப் புகுத்துவதற்காகத் ‘தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு’ ரூ.60 கோடி நிதி ஒதுக்கி நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.