BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள் மாற்றப்படும் என வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், விளையாட்டுத் துறையை சர்வதேச அளவிற்கு உயர்த்தவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிப்பதற்காக ரூ.163 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் மாநிலத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படுவதுடன், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்வாதாரமும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.