“டிகிரி முடித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…” வங்கி துறையில் 11,403 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

இந்தியாவில் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 11,403 கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்காக ஐபிபிஎஸ் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 675 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியுள்ள நபர்கள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வில் ஆங்கிலப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களுக்கான வினாக்கள் தமிழ் மொழியிலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணிக்கான முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளிலும், அதில் வெற்றிபெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதியும் நடைபெறும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள் குறைந்திருந்தாலும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பணியில் சேருபவர்களுக்கு ஆரம்பத்திலேயே மாதம் சுமார் ரூ.43,000 வரை ஊதியம் கிடைக்கும். எனவே தகுதியுள்ள பட்டதாரிகள் விரைவாக விண்ணப்பித்து இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.