#BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அடுத்த 3 நாள்களுக்கு செம சர்ப்ரைஸ்… அரசு சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று நாள்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்க கூட்டுறவுத் துறை ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்தச் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு 100% பொருள்கள் சேருவதை ரேஷன் பணியாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், எந்தெந்த நாள்களில் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்ற முழு விவரங்களையும், பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் தெளிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் கூட்டுறவுத் துறை தனது அறிவிப்பில் அறிவுறுத்தியுள்ளது.