அதிமுகவிற்கு பேரதிர்ச்சி…. வடசென்னை தூண் சரிந்தது… சற்றுமுன் தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி… செம ஷாக்கில் இபிஎஸ்….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய முகமாகவும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ராஜேஷ், தனது விருப்பத்தைக் கேட்காமல் கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி அதிலிருந்து விலகியுள்ளார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட இவர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் என்.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் ராஜேஷ் தவெகவின் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் கொள்கைகளும் செயல்பாடுகளும் தன்னை வெகுவாக ஈர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இனி தீவிரமாகச் செயல்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடசென்னைப் பகுதியில் செல்வாக்கு மிக்க மூத்த நிர்வாகியான ராஜேஷின் இந்த நடவடிக்கை, அப்பகுதியில் தவெகவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து இந்த இணைப்பைக் கொண்டாடியது வடசென்னை அரசியலில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டியுள்ளது.