ஒரு பைசா லஞ்சம் இல்லை.. ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு…. மாஸ் காட்டிய தமிழக அரசு… அதிரடி உத்தரவு…..!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த உதவி பொறியாளர்களின் பதவி உயர்வு தொடர்பான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு தற்போது சிறப்பான தீர்வினைக் கண்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மின்சாரத் துறை அமைச்சரின் தீவிர கண்காணிப்பின் கீழ், ஒரே நேரத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு ‘உதவி செயல் பொறியாளர்களாக’ பதவி உயர்வு வழங்கி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் முற்றிலும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மின்வாரிய ஊழியர்களின் பலகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களின் பணித் திறனையும் மன உறுதியையும் பெருமளவில் உயர்த்தியுள்ளது.