“தனியார்மயமாகிறதா டாஸ்மாக்….?” தீவிரமாக நடக்கும் பணிகள்…! அமைச்சர் விக்னேஷ் அளித்த முக்கிய அப்டேட்….!!

By Devi Ramu on ஆவணி 3, 2026

Spread the love

டாஸ்மாக் நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது குறித்து எழும் பல்வேறு கேள்விகளுக்கு, பொள்ளாச்சி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ் முக்கிய விளக்கமளித்துள்ளார். தற்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதாகவும், அதனைச் சீரமைத்துச் சரியான பாதைக்குக் கொண்டு வரத் தேவையான பலகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, டாஸ்மாக் நிர்வாகத்தைத் தனியார் நிறுவனங்களின் வசம் ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் இதுதொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.