தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்தச் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்குப் பிணை வழங்கியதோடு, மறுஉத்தரவு வரும் வரை தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
