“ப்ளீஸ் என்ன விட்ருங்க”… 15 வயது சிறுமியை கதற கதற… ஆம்புலன்ஸ் டிரைவர் முதல் வார்டு பாய் வரை…. திருவாரூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 15 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தாய், தந்தையை இழந்து தாத்தா-பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த சிறுமிக்கு நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இந்த 15 வயது சிறுமி, கடந்த ஜூலை 19-ஆம் தேதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாத்தா, பேத்தியைக் கண்டுபிடித்துத் தருமாறு எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சுமார் 10 நாட்களுக்குப் பிறகு சிறுமியைக் கண்டுபிடித்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில், குரும்பல் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விமல்ராஜ் (24) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி அச்சிறுமியிடம் முதன்முதலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

   

தொடர் பாலியல் கொடுமையால் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு வார்டு பாயாகப் பணிபுரிந்த திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முத்துக்குமரன் (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவரங்களை அறிந்த அதே மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய், சிறுமிக்கு உதவுவது போலப் பேசி அவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இச்சம்பவங்களை அறிந்த பாண்டி பகுதியைச் சேர்ந்த சங்கரய்யா (24) என்பவர் சிறுமியைத் திருப்பூருக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

   

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எடையூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி விமல்ராஜ், முத்துக்குமரன் மற்றும் சங்கரய்யா ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய்யைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்கள் உட்பட நான்கு பேர் அடுத்தடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.