அதிமுகவுடனான கூட்டணி குறித்து தஞ்சாவூரில் பேசிய பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், இனிவரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் அனைத்திலும் பாஜகவே முழுமையாகப் போட்டியிடும் எனத் தெரிவித்ததன் மூலம், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதைச் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் , புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள சூழலில், நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்திருப்பதையே உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
