பிஎப் பணம் எடுப்பது இனி ரொம்ப ஈசி… 48 மணி நேரத்தில் வங்கி கணக்கில் பணம்… EPFO கொண்டுவந்துள்ள அதிரடி டிஜிட்டல் மாற்றம்…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ, சந்தாதாரர்கள் தங்களது பிஎப் தொகையை விரைவாகப் பெறும் வகையில் பல டிஜிட்டல் சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. தற்போது பெறப்படும் விண்ணப்பங்களில் சுமார் 90 சதவீதம் தானியங்கி முறையிலேயே பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள மூத்த அதிகாரி ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி, இதன் மூலம் நிலுவைக் கோப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆவணங்கள் மற்றும் கணக்கு விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் பணம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேலும், பணப் பரிவர்த்தனைகளை இன்னும் சுலபமாக்க ‘பீம் யூபிஐ’ தளம் வழியாக நேரடியாக வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பும் புதிய திட்டத்தையும் இபிஎப்ஓ ஆய்வு செய்து வருகிறது. இதனுடன் கிக் பணியாளர்கள் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை விரிவாக்கம் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. தற்சமயம் பிஎப் வைப்புத் தொகைகளுக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த அதிவேகச் சேவை மாற்றங்கள் சந்தாதாரர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளன.