“ஹைதராபாத் டூ காசி… ஆன்மீகப் பயணம் போகலாம் வாங்க…” டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி…? எளிய வழி இதோ…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களான காசி, பிரயாக்ராஜ் மற்றும் கயா ஆகிய இடங்களுக்குப் பக்தர்கள் சுலபமாகப் பயணிக்கும் வகையில், இந்தியன் ரயில்வே ‘கங்கா கயா சங்கம் யாத்திரை’ என்ற சிறப்பு ரயில் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது. 8 இரவுகள் மற்றும் 9 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம், கங்கா ஆரத்தி, திரிவேணி சங்கமம் மற்றும் போத்கயா மகாபோதி கோயில் உள்ளிட்ட பல புனித தலங்கள் கவர் செய்யப்படுகின்றன. இந்தச் சுற்றுலா ரயில் செப்டம்பர் 2-ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 9-ம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறது.

இந்த யாத்திரைக்கான கட்டணம் எகானமி வகுப்பிற்கு 18,000 ரூபாயிலிருந்தும், ஸ்டாண்டர்டு வகுப்பிற்கு 20,500 ரூபாயிலிருந்தும், கம்ஃபர்ட் வகுப்பிற்கு 24,000 ரூபாயிலிருந்தும் தொடங்குகிறது. இதில் ரயில் கட்டணம், தங்குவதற்குக் ஹோட்டல் அறைகள், மூன்று வேளை சுத்தமான சைவ உணவு, சுற்றிப் பார்க்கப் பேருந்து வசதி மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள பக்தர்கள் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம், செயலி அல்லது ரயில்வே பிராந்திய அலுவலகங்கள் மூலமாகத் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.