அடச்சீ… கணவரின் நண்பனுடன் கள்ளக்காதல்… கோடரியால் வெட்டி வீசிய கொடூர மனைவி… கால்வாயில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்… நெஞ்சை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

By Swetha on ஆடி 31, 2026

Spread the love

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில், திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்து, அடையாளத்தை மறைக்க நிர்வாண சடலத்தை கால்வாயில் வீசிய மனைவியையும் அவரது காதலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த வீரேந்திர சிங் என்பவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அவரது நண்பர் அரவிந்த் குமார் சிங்கிற்கும், வீரேந்திராவின் மனைவி மம்தா தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு கணவர் தடையாக இருந்ததால், கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த வீரேந்திர சிங்கை இருவரும் சேர்ந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.

கொலைக்குப்பின், உடலை அடையாளம் காண முடியாதவாறு ஆடைகள் முழுவதையும் அகற்றி நிர்வாண நிலையில் பெரிய கால்வாயில் வீசியுள்ளனர். இருப்பினும், கால்வாயில் மிதந்து வந்த சடலம் டும்ராவோன் அருகே உள்ள கல்மான்பூர் கிராமத்தை வந்தடைந்தபோது, அதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வீரேந்திர சிங் என்பதை உறுதிப்படுத்தினர்.

   

இதனைத் தொடர்ந்து வீரேந்திர சிங்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் செல்போன் இருப்பிடத் தகவல்களை ஆய்வு செய்து மம்தா தேவி மற்றும் அரவிந்த் குமார் சிங்கை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் தங்களது தவறை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பக்ஸார் போலீசாரால் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.