“வெளிநாட்டில் பணிபுரிவதாக நாடகம்…” 4 வயது சிறுமி உடல் முழுக்க காயம்…! பிஞ்சு குழந்தையை காதலனுடன் சித்திரவதை செய்த தாய்…. டாக்டர்களின் சாதுரியத்தால் அம்பலமான கொடூர சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்லட்சுமி என்பவரின் கணவர் ஜெகநாதன், வெளிநாட்டில் பணிபுரிவதாகக் கூறி ஊரில் கோடி கணக்கில் சீட்டுப் பணம் மோசடி செய்து தலைமறைவாகி இருந்தார். இதற்கிடையே, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நந்தினி என்ற பெண்ணுடன் ஜெகநாதனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நந்தினிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த பிஞ்சு குழந்தையை ஜெகநாதன் தொடர்ந்து அடித்துச் சித்ரவதை செய்து பாலியல் தொந்தரவுகளும் கொடுத்து வந்துள்ளார். இந்த கொடூரச் செயலுக்குச் சிறுமியின் தாய் நந்தினியும் உடந்தையாக இருந்துள்ளார்.

சிறுமி அலறும் சத்தம் கேட்டுச் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் விசாரிக்கவே, உடம்பு சரியில்லை எனப் பொய் சொல்லிச் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுமியின் உடலில் இருந்த பலத்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் தப்பியோடிய நிலையில், சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பதுங்கியிருந்த ஜெகநாதன் மற்றும் நந்தினியை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.