“திமுகவுக்கு கல்தா… எம்.எல்.ஏ பதவியை துறக்கும் ஓபிஎஸ்?”…. தவெகவில் திடீர் என்ட்ரி…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

திமுகவில் இணைந்து கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இணைந்த ஓபிஎஸுக்கு இதுவரை எந்தவொரு பொறுப்பும் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த நிலையில், தவெகவில் இணைவதே சிறந்தது என்று அவரது மகன் ரவீந்திரநாத் கூறிய ஆலோசனையை ஏற்று அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தனது எம்.எல்.ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகக் தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.